Share this book with your friends

THAMIZHAR MARAI / தமிழர் மறை IRAIVANIN MOZHI / இறைவனின் மொழி

Author Name: Thirumurugankalilingam | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

'மறை' என்பது மறைவானது அல்ல; மனிதர்களின் வாழ்க்கையோடு ஒன்றெனப் பயணிக்கும் காற்று போல் பயணப்படுவது மறை. 

காற்று எப்படி மனிதனின் உயிரை மரணமடையாது வைத்துள்ளதோ அதுபோல், மறையானது மனிதன் மாண்ட பின்பும் அவன் வினைகளை மரணமடையாது வைத்திருக்க உதவுகிறது. 

வள்ளுவன் வடித்த உலகப் பொதுமறையாம் 'திருக்குறளுக்கு' வழங்கும் வேறு பெயர்களில் ஒன்றான 'தமிழர் மறை' எனும் பெயர் கொண்டு இப்படைப்பிற்கு அப்பெயர் இட்டுள்ளேன். நம்முடைய சந்ததிகளுக்கு எப்படி நாம் நமக்கு பிடித்த தலைவரின் பெயரை சூட்டுகிறோமோ அதுபோல்தான் இதுவும்.

இந்தப் படைப்பு தன் கருவாய் சுமந்துள்ள ஒவ்வொரு தத்துவங்களும் மனிதன் வாழ்வோடு பிண்ணிப் பிணைந்தவை. அல்லது, பிணைக்கப்பட வேண்டியவை.

இந்த மண்ணிற்கு துளியும் சம்பந்தம் இல்லாத ஒருவன் நம்மை ஆளத் துடித்தால் அவனை நோக்கி கற்களை வீசுவதற்கு பதிலாக, இதில் இருக்கும் ஏதேனும் ஒரு கருத்துகளை தூக்கி வீசலாம்.

நிச்சயமாக இந்தப் படைப்பானது வேறு எந்தவொரு படைப்புடனும் கூட்டணியும் பேசவில்லை; மது அருந்தி இது எழுதப்படவுமில்லை.

சுருக்கமாக, 'இந்தப் படைப்பு உயிர் கொண்டது' என்ற வாசகத்தோடு உங்களிடம் தமிழர் மறையை சமர்ப்பணம் செய்கிறேன். இந்தப் படைப்பை வாழ விடுவது இனி உங்கள் பொறுப்பு.

Read More...
Paperback
Paperback 275

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

திருமுருகன்காளிலிங்கம்

இவரின் அகவையை மனதில் கொண்டு நீங்கள் இப்படைப்பை படித்தால் உங்களுக்கு இப்படைப்பு புதுமையாக தோன்றும்; இப்படைப்பை மனதில் கொண்டு இவரின் அகவையை நீங்கள் கணக்கிட்டால் இவருடைய அகவை உங்களுக்கு பழமையாக தோன்றும். 

இவர் எழுதியிருக்கும் ஒவ்வொரு தத்துவங்களையும் தமிழ்தேசியம் 'தனது' என்று உரிமை கொண்டாடுகிறது. இவர் எழுதியிருக்கும் ஒவ்வொரு தத்துவங்களையும் தமிழர் மெய்யியல் 'தனது' என்று உரிமை கொண்டாடுகிறது. ஆதலால், இவரை இந்த தமிழ்மண் 'தனது' என்று உரிமை கொண்டாடுகிறது. 

இதிலிருக்கும் ஒவ்வொரு தத்துவங்களையும், ஒருமுறை படித்தால் 'வாசகம்'; சிலமுறை படித்தால் 'கவிதை'; பலமுறை படித்தால் 'மறை'.

மண்ணால் சுமக்கப்படுகின்ற ஒவ்வொருவரும் சுமக்க வேண்டிய ஓர் படைப்புதான் இந்த 'தமிழர் மறை'!

Read More...

Achievements

+11 more
View All