Share this book with your friends

Ullaga arasiyal amaippugaḷ / உலக அரசியல் அமைப்புகள்

Author Name: K.SenthilKumar, K.Bharathiraja, S.P. Selvamani, K.Nirthila | Format: Paperback | Genre : History & Politics | Other Details

“பாலிடிக்ஸ்”என்கிற புத்தகத்தை,கிட்டத்தட்ட நூற்று ஐம்பத்து எட்டு அரசியல் சட்டங்களை ஆராய்வு செய்து படைத்தார் அரிஸ்டாட்டில்.அரசியல் அறிவியலின் தந்தை என்றும் போற்றத்தக்க பெயர் பெற்றவர்.அவரின் மாணவரான மாவீரன் அலெக்சாண்டர் அனைத்து கண்டங்களையும் தன்  செங்கோலுக்கு கீழ் கொண்டு வர முனைந்ததில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை.ஐரோப்பாவில் இருந்து இந்தியா வரை கால் பதித்த மாவீரன் அனைத்து கல்வி  கேள்விகளிலும் கற்று தேர்ந்தவன் ஆவான்.ஒவ்வொரு நாட்டின் அரசியல் சட்டங்களை கற்று தேர்ந்தாலே அந்நாடு நம் வசப்படக்கூடிய மனப்பாங்கு நம்மிடம் வந்துவிடும்.புரியாத பாடங்கள்,புரிந்த பிறகு ஏற்படக்கூடிய மனநிலை போல.அரசியல் சாசன சட்டம் என்பது ஒரு நாட்டின் வேராக கருதப்படுகிறது.ஒரு நாட்டின் ஆட்சி அரசியல் சட்டத்தை வைத்தே நடத்தப்பெறுகிறது. நவீன கால யுகத்தில் முதன் முதலில் அரசியல் சாசன சட்டமானது 1634 ல் சுவீடன்நாட்டில் இயற்றப்பட்டது.பின்னே நாளடைவில் நாகரீக வளர்ச்சிக்கேற்பவும் சிந்தனையாளர்களின் எழுத்தோ ட்டத்திர்க்கேர்ப்பவும் பல நாடுகளில் அரசியல் சட்டங்கள் மேம்படுத்தி உருவாக்கப்பட்டன.குடியரசு தலைவர் ஆட்சி பாராளுமன்ற ஆட்சி போன்ற முறைகள் நாடுகளின் தன்மைக்கேற்ப நடைமுறைப்படுத்தப்பட்டன.இங்கிலாந்து அமெரிக்கா பிரான்ஸ் ரஷ்யா  சீனா தெற்கு ஆப்ரிக்கா சுவிஸ் ஜப்பான் இந்தியா போன்ற முக்கிய நாடுகளின் அரசியல் சாசன சட்டங்கள் இப்புத்தகத்தில் அளிக்கப்பட்டுள்ளன.போட்டி தேர்வுகளுக்கும் இன்னபிற தேர்வுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது

Read More...

Sorry we are currently not available in your region.

Sorry we are currently not available in your region.

Also Available On

முனைவர்.கு.செந்தில்குமார், முனைவர்.க.பாரதிராஜா, முனைவர்.சு.ப.செல்வமணி, முனைவர்.க. நித்திலா

முனைவர்.கு.செந்தில்குமார் தற்சமயம் அழகப்பா பல்கலைகழகத்தில் அரசியல் & பொது நிர்வாக துறையில் இணை பேராசிரியராக பணியாற்றி கொண்டிருக்கிறார்.குடிமை பணிகளுக்கான தேர்வுகளுக்கு பயிற்ச்சி அளித்து கொண்டிருக்கிறார்.பல ஆராய்ச்சி கட்டுரைகளை பன்னாட்டளவில் பிரசுரித்த இவர் சமீபத்தில் ஜோஹன்னஸ்பர்க் பல்கலைகழகத்தில் தனது ஆராய்ச்சி கட்டுரையை சமர்பித்துள்ளார்.இவருடைய சமீபத்திய வெளியீடு ஆராய்ச்சி முறைமையாகும்.பன்னாட்டு உறவுகள்,மனித உரிமைகள் போன்ற பிரத்யோக பாடங்களில் தற்சமயம் கவனம் செலுத்தி வருகிறார்.

Read More...

Achievements

+9 more
View All