Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh PalK. Senthil Kumar is serving as an Associate Professor in the Department of Politics & Public Administration, Alagappa University. He did his Ph.D in the area of United Nations organization and received the award in 2004. He has visited the Kyoto University of Foreign Studies, Japan and Johannesburg University and South Africa for invited research paper presentations in the recent past. He has made 25 publications in various journals as well as several conference proceedings. Under his guidance 6 candidates were awarded with PhD and 15 for M. Phil. He has also delivered numerous special lectureRead More...
K. Senthil Kumar is serving as an Associate Professor in the Department of Politics & Public Administration, Alagappa University. He did his Ph.D in the area of United Nations organization and received the award in 2004. He has visited the Kyoto University of Foreign Studies, Japan and Johannesburg University and South Africa for invited research paper presentations in the recent past. He has made 25 publications in various journals as well as several conference proceedings. Under his guidance 6 candidates were awarded with PhD and 15 for M. Phil. He has also delivered numerous special lectures in the area of Human Rights and other related fields. He has served as a resource person for civil service as well as for NET/SLET coaching in various universities, colleges and institutes. His present area of research is global order and eternal peace with no less importance on other fields of political science and international relations. He has also made his debut in various TV channels including Kalaignar, Jaya, Doordarshan Podigai with regard to competitive examinations.
Read Less...Achievements
முனைவர்.கு.செந்தில்குமார் அழகப்பா பல்கலைகழகத்தில் அரசியல் & பொது நிர்வாக துறையில் இணை பேராசிரியராக பணியாற்றி கொண்டிருக்கிறார்.குடிமை பணிகளுக்கான தேர்வுகளுக்கு பயிற்ச்
முனைவர்.கு.செந்தில்குமார் அழகப்பா பல்கலைகழகத்தில் அரசியல் & பொது நிர்வாக துறையில் இணை பேராசிரியராக பணியாற்றி கொண்டிருக்கிறார்.குடிமை பணிகளுக்கான தேர்வுகளுக்கு பயிற்ச்சி அளித்து கொண்டிருக்கிறார்.பல ஆராய்ச்சி கட்டுரைகளை பன்னாட்டளவில் பிரசுரித்த இவர் சமீபத்தில் ஜோஹன்னஸ்பர்க் பல்கலைகழகத்தில் தனது ஆராய்ச்சி கட்டுரையை சமர்பித்துள்ளார்.இவருடைய சமீபத்திய வெளியீடு நவீன அரசியல் பகுப்பாய்வு ஆகும்.பன்னாட்டு உறவுகள்,மனித உரிமைகள் போன்ற பிரத்யோக பாடங்களில் தற்ச்சமயம் கவனம் செலுத்தி வருகிறார். இவரின் சமீபத்திய பிரசுரிப்பு “இந்திய அரசியல் சட்டம்”ஆகும்
முனைவர் ர.கிருஷ்ணன் இந்திய மக்களின் வாக்களிப்பு நடத்தை,நாசிக் பற்றிய தலைப்பில் முனைவர் பட்டத்தை அண்ணாமலை பல்கலை கழகத்தில் பெற்றுள்ளார்.மும்பையில் தொழில் துறையில் பணியாற்றி கொண்டு இருக்கின்ற இவருக்கு எழுத்தின் மீதும் ஆராய்ச்சியின் மீதும் தீராத ஆர்வம் உள்ளதால் பல ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதி உள்ளார்.இந்திய நாட்டின் வளர்ச்சியின் மீது தீராத நம்பிக்கை கொண்டவர்.இவரின் சமீபத்திய பிரசுரிப்பு “இந்திய அரசியல் சட்டம்”ஆகும்
முனைவர் நித்திலாகண்ணன்,தற்சமயம் சேலம் அரசு கலை கல்லூரியில் கௌரவ பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.எம்.ஏ மற்றும் எம்.பி.ஏ பட்டத்தினை அண்ணாமலை பல்கலைகழகத்தின் மூலமாக பெற்றுள்ளார்.பெரியார் பல்கலைக்கழகத்தின் மூலமாக சேலம் மாவட்டத்தில் உள்ள சுய உதவி குழுக்களின் வாயிலாக பெண்களின் முன்னேற்றம் என்ற தலைப்பில் ஆராய்ச்சியில் ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.இருபத்துக்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் தனது ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.இவரின் சமீபத்திய பிரசுரிப்பு “இந்திய அரசியல் சட்டம் ” ஆகும்.
இந்தியாவிற்கென்று அரசியல் சட்டம் அவசியமானது என்று எம்.என்.ராய் இந்திய விடுதலைக்கு முன்பே 1934 ல் கருத்து தெரிவித்துள்ளார்.இன்றைய நவீன கால யுகத்தில் உலக நாடுகள் அனைத்தும் இந
இந்தியாவிற்கென்று அரசியல் சட்டம் அவசியமானது என்று எம்.என்.ராய் இந்திய விடுதலைக்கு முன்பே 1934 ல் கருத்து தெரிவித்துள்ளார்.இன்றைய நவீன கால யுகத்தில் உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை போற்றுவதற்கு காரணம் அதனுடைய எழுதப்பட்ட அரசியல் சட்டம் மற்றும் ஜனநாயக கலாச்சாரம் போன்ற காரணிகள் ஆகும்.இவ்வாறான அரசியல் சட்டம் இந்திய மக்களின் கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கம் பெற்றது.உரிமைகள்,கடமைகள் நிர்வாகம், சுதந்திர அரசு அமைப்புகள், ஆணையங்கள், நீதித்துறை சார்ந்த கண்காணிப்பு அமைப்புகள் அனைத்தும் மக்களை பாதுகாக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ளது.368 சட்டத்தின் கீழ் சட்ட சீர்திருத்தம் சிறந்து செயல்படுவதால் பெருவாரியான சூழ்நிலைகளில் காலத்திற்கு ஏற்றார் போல சட்டங்கள் மாற்றப்படுகின்றன அல்லது சில தேவையான பகுதிகள் சேர்க்கப்படுகின்றன.மாணவர் சமூகம் கண்டிப்பாக அரசியல் சட்டம் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும்.இதனாலேயே பல கல்லூரி பல்கலைக்கழகங்களில் அரசியல் சட்டம் கட்டாய பாடமாக உள்ளது.ஒவ்வொரு இந்திய பிரஜையும் இப்புத்தகத்தை படித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.போட்டி தேர்வுகளுக்கும் இப்புத்தகத்தை படித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்தியா என்கிற நன்னெறியானது உலக அளவிலே அமைதிக்கான ஆளுமையாக
உள்ளது என்றால் அது மிகையாகாது. கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட பிரிவுகளாக
இருந்த நிலப் பிரிவினையானது ஒன்று சேர
இந்தியா என்கிற நன்னெறியானது உலக அளவிலே அமைதிக்கான ஆளுமையாக
உள்ளது என்றால் அது மிகையாகாது. கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட பிரிவுகளாக
இருந்த நிலப் பிரிவினையானது ஒன்று சேர்க்கப்பட்டு “வேற்றுமையில் ஒற்றுமை”
என்கிற பண்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு சீரான பாதையில் செயல்படுகிறது
இந்தியா.இதே பண்பானது இந்திய அயல்நாட்டு கொள்கையிலும் நாம் சீர்தூக்கி
பார்க்கலாம்.பாகிஸ்தான் இலங்கை ஆப்கானிஸ்தான் நேபால் ஆகட்டும் அல்லது
அமெரிக்கா ரஷ்யா பிரான்ஸ் பிரிட்டன் ஆகட்டும் அத்தனை நாடுகளுடன் பரஸ்பர
நல்லுறவை மேம்படுத்தி வந்துள்ள ஒரே நாடு இந்தியாவாக தான் இருக்கும்.
அயல்நாடுகள் அத்துனையுமே பல்வேறு பிரச்சனைகளில் அமைதியை இழந்து
தவிக்கிற பொழுது இந்திய நாடானது ஜனநாயக கொள்கையிலே சிறிதளவும்
வழுவாமல் வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது.கொரோனா-19
காலகட்டங்களில் இந்தியாவின் மருந்துதவியானது “பார்மசி ஆப் த வேர்ல்ட்” என்கிற
பேரன்பிற்குரிய பட்டத்தை இந்தியாவிற்கு பெற்று தந்துள்ளது.அதேபோல உலக
அமைதிக்காக இதுவரை செயல்பட்ட 70க்கும் மேற்பட்ட ஐக்கிய நாட்டு சபை அமைதி
காக்கும் படைகளில் 40க்கும் அதிகமான நாடுகளில் தன்னுடைய ராணுவத்தை
அனுப்பி அமைதி நிலையை மீட்டெடுத்தது இந்தியா.கலாச்சாரம் பண்பாடு
பாரம்பரியம் மொழி போன்ற அத்தனை அம்சங்களிலும் பழமை வாய்ந்த இந்திய
நாடானது வல்லரசாவதற்கு தகுதியைப் பெற்றிருந்தாலும் நல்லரசாக இருப்பதற்கே
விரும்புகிறது என்பதை அதன் வெளியுறவு கொள்கையிலிருந்து தெரிந்து
கொள்ளலாம்.இப்படைப்பானது இந்தியாவின் அயல் நாட்டுக் கொள்கையையும்
உறவுகளையும் எடுத்தியம்பும் ஒரு முயற்சியாகும்.போட்டி தேர்வுகளுக்கும் ஏனைய
பல்கலைக்கழக கல்லூரி தேர்வுகளுக்கும் கண்டிப்பாக உதவும் என நம்பப்படுகிறது.
அரசியலை அறிவியல் ரீதியாக அணுகியவர்களில் முதன்மையானவர் என்று போற்றப்படுபவர் “பாலிடிக்ஸ்” “எத்திக்ஸ்” போன்ற முக்கிய படைப்புகளை படைத்த அரிஸ்டாட்டில் ஆவார்.அதற்கு முன்னத
அரசியலை அறிவியல் ரீதியாக அணுகியவர்களில் முதன்மையானவர் என்று போற்றப்படுபவர் “பாலிடிக்ஸ்” “எத்திக்ஸ்” போன்ற முக்கிய படைப்புகளை படைத்த அரிஸ்டாட்டில் ஆவார்.அதற்கு முன்னதாகவே அர்த்த சாஸ்திரத்தை வழங்கிய கௌதிலியர் என்கிற சாணக்கியர், அரசியலை மனித இயல்பை அடிப்படையாக கொண்டு எதார்த்த வாதியாகவும் சக்தியை மையமாக வைத்தும் கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.பொலீபியாஸ், சிசரோ, கன்பூசியஸ், தூசிடைட்ஸ், மார்சீலியோ செயின்ட் அகஸ்டின், கார்ல் மார்க்ஸ், அலெக்ஸ் டி டோக்வில்லி போன்ற பல சிந்தனைவாதிகளும்,அரசியல் அறிவியலை வெவ்வேறு பார்வையிலே தங்களுடைய படைப்புகளில் பதிவிட்டு உள்ளனர். அரசியலை முழு அறிவியலாக சித்தரித்து கல்வி நோக்கில் உலகிற்கு அறிமுகப்படுத்தியது “லீவேதான்” என்கிற மாபெரும் படைப்பை உருவாக்கிய ஹாப்ஸ் ஆவார்.நடத்தைவாதம்,பின்-நடத்தைவாதம்,கட்டுமான செயல்பாட்டு வாதம் முறைமை கோட்பாடு, விளையாட்டு கோட்பாடு போன்ற பல ஆராய்ச்சி தீர்வுகள் அப்போதைக்கு அப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் அரசியல் துறை, அறிவியல் ஒட்டியே செயல்பட வேண்டும் என்று ஒரு சாராரும்,மதிப்புகளை ஒட்டியே அரசியல் அறிவியல் என்கிற பாடம் அமைந்துள்ளதாக மறு சாராரும் பிரதிவாதம் அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.இத்தகைய சூழ்நிலையிலே நவீன அரசியல் பகுப்பாய்வு என்கிற இந்த புத்தகம் பல கல்லூரி, பல்கலை கழகங்களின் ஆசிரியர்களின் மூலமாக வெளி கொணரப்பட்டுள்ளது.மதிப்புகள் மற்றும் உண்மைகள் சார்ந்த கருத்து வாதங்கள்,அரசியலில் அறிவியலின் நிலை,புதிய கோட்பாடுகளின் உருவாக்கம் போன்ற அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது.யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி, என் இ டி போன்ற தேர்வுகளுக்கு மட்டுமல்லாது அரசியல் அறிவியலிலே இளங்கலை மற்றும் முதுகலை, பிஹெச்டி போன்ற படிப்புகளுக்கும் இப்படைப்பு உதவும் என்று நம்பப்படுகிறது.
“பாலிடிக்ஸ்”என்கிற புத்தகத்தை,கிட்டத்தட்ட நூற்று ஐம்பத்து எட்டு அரசியல் சட்டங்களை ஆராய்வு செய்து படைத்தார் அரிஸ்டாட்டில்.அரசியல் அறிவியலின் தந்தை என்றும் போற்றத்தக்க
“பாலிடிக்ஸ்”என்கிற புத்தகத்தை,கிட்டத்தட்ட நூற்று ஐம்பத்து எட்டு அரசியல் சட்டங்களை ஆராய்வு செய்து படைத்தார் அரிஸ்டாட்டில்.அரசியல் அறிவியலின் தந்தை என்றும் போற்றத்தக்க பெயர் பெற்றவர்.அவரின் மாணவரான மாவீரன் அலெக்சாண்டர் அனைத்து கண்டங்களையும் தன் செங்கோலுக்கு கீழ் கொண்டு வர முனைந்ததில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை.ஐரோப்பாவில் இருந்து இந்தியா வரை கால் பதித்த மாவீரன் அனைத்து கல்வி கேள்விகளிலும் கற்று தேர்ந்தவன் ஆவான்.ஒவ்வொரு நாட்டின் அரசியல் சட்டங்களை கற்று தேர்ந்தாலே அந்நாடு நம் வசப்படக்கூடிய மனப்பாங்கு நம்மிடம் வந்துவிடும்.புரியாத பாடங்கள்,புரிந்த பிறகு ஏற்படக்கூடிய மனநிலை போல.அரசியல் சாசன சட்டம் என்பது ஒரு நாட்டின் வேராக கருதப்படுகிறது.ஒரு நாட்டின் ஆட்சி அரசியல் சட்டத்தை வைத்தே நடத்தப்பெறுகிறது. நவீன கால யுகத்தில் முதன் முதலில் அரசியல் சாசன சட்டமானது 1634 ல் சுவீடன்நாட்டில் இயற்றப்பட்டது.பின்னே நாளடைவில் நாகரீக வளர்ச்சிக்கேற்பவும் சிந்தனையாளர்களின் எழுத்தோ ட்டத்திர்க்கேர்ப்பவும் பல நாடுகளில் அரசியல் சட்டங்கள் மேம்படுத்தி உருவாக்கப்பட்டன.குடியரசு தலைவர் ஆட்சி பாராளுமன்ற ஆட்சி போன்ற முறைகள் நாடுகளின் தன்மைக்கேற்ப நடைமுறைப்படுத்தப்பட்டன.இங்கிலாந்து அமெரிக்கா பிரான்ஸ் ரஷ்யா சீனா தெற்கு ஆப்ரிக்கா சுவிஸ் ஜப்பான் இந்தியா போன்ற முக்கிய நாடுகளின் அரசியல் சாசன சட்டங்கள் இப்புத்தகத்தில் அளிக்கப்பட்டுள்ளன.போட்டி தேர்வுகளுக்கும் இன்னபிற தேர்வுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது
உலக சமூகத்தில் மக்கள் எண்ணற்ற விதத்தில் பிரிவினையின் அடிப்படையில் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.சமூக அறிவியல் சார்ந்த பாடங்கள் ஆராய்ச்சியின் வளர்ச்சி மூலமாக புதி
உலக சமூகத்தில் மக்கள் எண்ணற்ற விதத்தில் பிரிவினையின் அடிப்படையில் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.சமூக அறிவியல் சார்ந்த பாடங்கள் ஆராய்ச்சியின் வளர்ச்சி மூலமாக புதிய கருத்துக்களையும் கோட்பாடுகளையும் விளக்கத்துடன் அளித்து வருகின்றன.சமூக அறிவியலில் உள்ள பாடங்கள் பெருமளவில் மனிதனையே மைய்யமாக கொண்டு வளர்ந்து வருகின்றன.மனிதனை அடிப்படையாக கொண்ட சமூக அறிவியலில் ஆராய்ச்சி என்பது கோட்பாடுகளின் வாயிலாக மாறிவருகிறது.நாகரீக வளர்ச்சி மற்றும் அறிவியல் தொழிற்நுட்ப மேம்பாடு நவீன காலத்தில் பலவித சிக்கல்கள் கொண்ட பிரச்சினைகளை கட்டவிழ்த்து விடுகின்றன.இவ்வகையான பிரச்சினைகளுக்கு சமூக அறிவியலில் நடத்தபெற கூடிய ஆராய்ச்சியின் முடிவுகள் நல்லதொரு தீர்வாக அமைகின்றன.தமிழில் ஆராய்ச்சி முறைமைக்கென்று குறைவாகவே புத்தகங்கள் உள்ளது.இப்படைப்பு அக்குறையை தீர்க்கும் விதத்தில் படைக்கப்பட்டுள்ளது எனலாம்.ஆராய்ச்சி முறைமைகள்,கருதுகோல்கள்,மாதிரிகள்,பழமைவாதம்,பகுப்பாய்வு போன்ற கருத்துகள் இப்புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது.முனைவர் பட்டத்தை சமூக அறிவியல் ஆராய்ச்சியில் பெற விரும்புவர்கள் இப்புத்தகத்தை படித்து பயன்பெறலாம்.
“இசை ரசனை மக்களிடத்தே மாறுகிறபோது,அங்கே கலாச்சாரம் மாறக்கூடும்”, 2300 வருடங்களுக்கு முன்பாக தன் உள்ளுணர்வின் மூலம் இச்சிந்தனையை தருவித்துள்ளார் பெருமகனார் அரிஸ்டாட்டி
“இசை ரசனை மக்களிடத்தே மாறுகிறபோது,அங்கே கலாச்சாரம் மாறக்கூடும்”, 2300 வருடங்களுக்கு முன்பாக தன் உள்ளுணர்வின் மூலம் இச்சிந்தனையை தருவித்துள்ளார் பெருமகனார் அரிஸ்டாட்டில். ”உன்னை அறிந்தால்” இவ்வுலகம் உன் வசப்படும், என்று உரைத்துள்ளார் அரிஸ்டாட்டிலின் ஆசிரியரான சாக்ரடீஸ், ஆட்சி செய்பவன் “தத்துவஞானியாக” அமைந்தால் நாட்டிற்கு சிறப்பு என்று எடுத்துரைத்துள்ளார் பிளாட்டோ. இவ்வுலக மக்கள் “எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க பெற வேண்டும்” என அரை கூவல் விடுத்துள்ளார் “கேப்பிட்டல்” எழுதியுள்ள மார்க்ஸ். ”நாகரீக வளர்ச்சியானது மனிதத்தை அழிக்கக் கூடிய கருவியாக விளங்குகிறது என சாடுகிறார் “சமூக ஒப்பந்தம்” அருளிய ரூசோ.இவ்வாறான சிந்தனையோட்டங்கள், மனிதர்களை மட்டுமல்லாது, உலக சமூக பொருளாதார அரசியல் அமைப்புகளையும் செம்மைப்படுத்தியுள்ளது. பல்வேறு சிந்தனைகளின் தொகுப்பாக உருவாகியுள்ள இப்படைப்பு, அறநெறி மாற்றுச் சிந்தனைகள் மாணவரிடத்தே பிறப்பதற்கும், மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது. திருக்குறள், அர்த்தசாஸ்த்திரம் போன்ற வியக்கத்தக்க கிழக்கத்திய சிந்தனைகள் இருந்தபோதிலும், மேற்கத்திய சிந்தனைகள் பல பாடங்கள் தனித்தன்மையாக உருவாவதற்கு காரணகர்த்தாவாக விளங்கியதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. மாணவ சமூக அறிவு தேடலுக்கும், வேலை வாய்ப்புக்கும் இப்படைப்பு பயனளிக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
சர்வதேச அரசியல் என்பது உலக அரங்கில் நடைபெறும் நிகழ்வுகளை ஒட்டி மாறி கொண்டும், வளர்ந்துகொண்டிருக்கும் பாடமாகும். அரசியல் அறிவியலின் துணை பாடமான சர்வதேச அரசியல், பன்னாட்ட
சர்வதேச அரசியல் என்பது உலக அரங்கில் நடைபெறும் நிகழ்வுகளை ஒட்டி மாறி கொண்டும், வளர்ந்துகொண்டிருக்கும் பாடமாகும். அரசியல் அறிவியலின் துணை பாடமான சர்வதேச அரசியல், பன்னாட்டு மற்றும் உலக அரசியல் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கபெருகிறது. இந்திய நாட்டிற்கு எந்தளவிற்கு அதன்அரசியல் சாசன சட்டம் அவசியமாக திகழ்கிறதோ, அதே அளவிற்கு உலக அமைதிக்கு நாடுகள் இடையேயான சுமூக உறவுகள் அவசியமாகிறது. மனித வாழ்வில் அத்தியாவசியமான தேவைகளான;குடிநீர், மருத்துவம், உணவுபொருட்கள், வாணிபம், பொருளாதார முன்னேற்றம், சமூக வளர்ச்சி, நல்லியல்பு அரசியல், பொது விநியோகம் ஆகியவை அனைத்துமே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, உலக முறைமையின் மூலமாக நிர்ணயிக்கப்படுகிறது. தனித்த பொருளாதார கொள்கை என்பது தாராளமயமாக்கல் உலகில் சாத்தியமில்லாத ஒன்றாகும். ஜப்பான், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் முன்னைய காலகட்டங்களில் தனித்த பொருளாதாரமாக விளங்கின. ஆனால் தற்ச்சமயம் அந்நிலை இயலாத நிலையாக உள்ளது. நவீன கால யுகத்தில் நாடுகளிடையே, சுமூக உறவுகள் மட்டுமே உலக அமைதிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் வழி வகுக்கும் என்று நம்பப்படுகிறது. உலக போர்கள், பனிப்போர், நாடு பிடிக்கும் அரசியல், பொருளாதார சூறையாடல், ஏகாதிபத்தியம், இயற்கை வளங்களை சொந்தம் கொண்டாடுதல், இனப்போர், மொழிப்போர், மதப்போர், கொள்கைப்போர் போன்ற பல்வேறு உலக நிகழ்வுகள் வளரும் மனித நாகரீகங்களை சிதைக்கும் வண்ணம் உள்ளன. சுருங்க கூறின், அமெரிக்கா என்ற ஒரு தனி நாடு ஆட்டம் காணும் பட்சத்தில் ஒட்டுமொத்த உலக அமைதியே பாதிக்கும்படியான முறைமை தற்போது காணப்படுகிறது. போட்டி தேர்வுகளுக்கு மட்டுமின்றி சராசரி மனிதர்களும் உலக அரசியலைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இப்படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
“Knowledge is Power,” That’s truer than one can ever imagine. Few people realize how significant knowledge can be. Knowledge is what allows us to drive cars instead of ride horses, it is what helps us live on far longer than we should, and knowledge is even what prevents us from committing the same mistakes we made in the past.
At the outset, this book aims at aspirants of NET/SLET, IAS, GROUP examinations.
NET/SLET, IAS, Gr
“Knowledge is Power,” That’s truer than one can ever imagine. Few people realize how significant knowledge can be. Knowledge is what allows us to drive cars instead of ride horses, it is what helps us live on far longer than we should, and knowledge is even what prevents us from committing the same mistakes we made in the past.
At the outset, this book aims at aspirants of NET/SLET, IAS, GROUP examinations.
NET/SLET, IAS, Group exam aspirants will be armed with very vital inputs pertaining to Political Science by reading this work which is the synthesis of both elaboration and precision on the basis of contents in the chapters.
Basic concepts of political science viz., State, government, ideology were covered in this work. Every chapter comprises of hundreds of unfamiliar information, much need to know in today’s context to update knowledge. It is also elaborative and precise on the basis of the content of the chapter. For beginners as it is written in Tamil, it goes a long way to facilitate them to understand the fundamental concepts in political science. For general readers this book imbibes them to have a firsthand knowledge about the concepts. This work embraces the gamut of the concepts related to history, politics, society, philosophy, international order, and governance so on so forth. The recent financial crisis is also cited in global perspective in many chapters. Preface of this book may as well be considered as chapter since it consists of invaluable information concerning the governance.
Probably there may be N no of books in English but rare to see a book in Tamil and this work certainly fulfills that void. Utmost care has been taken in this monumental assignment. Again the detailed discussion starting from the age of antiquity hitherto in 21st century may give the readers a logical understanding of different phases of governance and their nature.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.