Share this book with your friends

Tamilzhaivu Manigal / தமிழாய்வு மணிகள்

Author Name: Dr. K. Ramganesh | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

படைப்பினை ஆழ்ந்து நோக்கி, சிறந்த கண்ணோட்டத்தோடு படைப்பு உருவானதன் தேவையை அணுகி அதன் இயல்புகளை வெளிப்படுத்த ஆய்வு தேவையாகிறது. ஏன்? எப்படி? எதற்காக? எனும் கேள்விகள் மனித சிந்தனைக்குத் தோற்றுவாயாகிறது. இந்த உந்து சக்தியே, சிறந்த படைப்புகளுக்கு அங்கீகாரத்தை வழங்குகிறது. அவ்வகையில் சங்க காலம் தொடங்கி தற்காலம் வரையிலும் படைப்புகளால் தமிழுலகம் கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும் படைப்பினைச் சுவைத்து அதன் இனிமையைப் பறைசாற்றுவதற்கான முயற்சியில் எனது ஆய்வுக் கட்டுரைகள் அமைந்துள்ளன.

மனத்தின் அறிதிறன் கொண்டு கட்டுரைகள் ஆய்வுநெறிக்கண் அமைந்துள்ளன. இலக்கியப் பாடுபொருள்கள் ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒவ்வொரு வகையாக அமைந்திருக்கின்றது. ஆய்வுக்கான அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டு இலக்கிய வெளிச்சம் உலகம் முழுவதும் மேலும் பரவ இக்கட்டுரைகள் வழிகாட்டும் என நம்புகிறேன்.

Read More...
Paperback
Paperback 180

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

முனைவர் கி. ராம்கணேஷ்

முனைவர் கி. ராம்கணேஷ் (உடுமலை கி. ராம்கணேஷ்), மதுரை, பாரதி யுவ கேந்திரா நிறுவனம் சிறந்த மாணவருக்கான ‘சுவாமி விவேகானந்தர்’ விருது வழங்கியுள்ளது. இவர் படைத்த கவிதை நூல் ஒன்றிற்கு ‘திருப்பூர் இலக்கிய விருது’ பெற்றுள்ளார்.

பல்வேறு கருத்தரங்குகள், பயிலரங்குகளில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரைகளை வாசித்துள்ளார். மதுரைமணி நாளிதழ்> திருக்கோயில் மாத இதழ், குருகுலத்தென்றல் மாதஇதழ்> கவிச்சூரியன் மின்னிதழ், கல்கி இதழ், தி இந்து - காமதேனு இதழ், விஜயபாரதம் இதழ், வல்லமை மின்னிதழ், பதிவுகள் மின்னிதழ், முத்துக்கமலம் மின்னிதழ், தினமணி நாளிதழ், அருளமுது இதழ், இகரமுதல்வி இதழ், காற்றுவெளி மின்னிதழ், கணையாழி மாத இதழ், பாவையர் மலர் மாத இதழ், கீற்று மின்னிதழ், தமிழ் டாக்ஸ் மின்னிதழ், புன்னகை இதழ், கொலுசு மின்னிதழ், குமுதம் - தீராநதி இதழ், ஆன்மிக மலர் மெயில் புக், தென்றல் மின்னிதழ் (அமெரிக்கா), ஆப்பிரிக்கா தமிழ்ச்சாரல் (கின்சாசா), சஹானா மின்னிதழ், கோடுகள் மின்னிதழ், பொம்மி சிறுவர் மாத இதழ் ஆகியவற்றில் தம் படைப்புகளை வெளியிட்டுள்ளார். அரசு உதவி பெறும் கல்லூரி ஒன்றில் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) உதவியுடன் வெளிவந்த பாடப்புத்தகங்களில் இவரது “வைணவம் வளர்த்த தமிழ்”> “ சுருக்கம் தேடும் விரிந்த கவிதைகள்”> சி.சு. செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ நாவல் ஆகிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஆண்டவன் அடித்த மொட்டை (கவிதை நூல் - அமேசான் கிண்டில்)> நெய்தல் திணையும் மக்களின் உளப்பாங்கும் (ஆய்வு நூல்)> நெய்தலகமும் தும்பைப்புறமும் (ஆய்வு நூல்)> வழிகாட்டி (சிறுகதைக் கதம்பம்), தமிழாய்வுக் கனிகள் (ஆய்வு நூல்) ஆகிய நூல்கள் வெளியிட்டுள்ளார். பல்வேறு  பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளார். பள்ளிகளில் பணியாற்றும் காலத்தில் மனிதஉரிமை, சுற்றுச்சூழல் குறித்த கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். படைப்புலகில் சாதிக்க வேண்டும் என்னும் நோக்கோடு கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள்  எழுதி வருகிறார்.

Read More...

Achievements

+1 more
View All