Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palஇந்நூலின் ஆசிரியர் முனைவர் கி. ராம்கணேஷ் (உடுமலை கி. ராம்கணேஷ்) அவர்கள் உடுமலையில் பிறந்த தமிழ் மாலை. சரளமான இலக்கண நடை, இலக்கிய அறிவு ஆகியவற்றால் காண்போரை வியக்க வைக்கும் சிறப்பாளர். பல்வேறு பள்ளி, கல்லூரி, தொண்டு நிறுவனங்கRead More...
இந்நூலின் ஆசிரியர் முனைவர் கி. ராம்கணேஷ் (உடுமலை கி. ராம்கணேஷ்) அவர்கள் உடுமலையில் பிறந்த தமிழ் மாலை. சரளமான இலக்கண நடை, இலக்கிய அறிவு ஆகியவற்றால் காண்போரை வியக்க வைக்கும் சிறப்பாளர். பல்வேறு பள்ளி, கல்லூரி, தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வ நிறுவனங்கள் நிகழ்த்தும் மேடைகளில் சிறப்பு விருந்தினராக உரை நிகழ்த்துபவர்.
புத்தக வாசிப்பு குறைந்து வரும் காலங்களில் இவரின் புத்தக வாசிப்பு ஆர்வம் என்னை மிகவும் கவர்ந்தது. சாதாரணமாக உரையாடும்போதும் எந்தப் பேச்சாக இருந்தாலும் தமிழ் இலக்கியச் சான்றுகளோடு உரையாடும் திறமை வியக்க வைக்கிறது.
சிறந்த பேச்சாளர் என்னும் தளத்தில் மட்டும் தம்மைச் சுருக்கிக் கொள்ளாமல் எழுத்துலகிலும் தம்மை நிரூபித்து வருகிறார். ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் எழுதி வருகிறார்.
தனியார்ப் பள்ளிகளில் ஐந்தாண்டுகள் முதுகலைத் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார். பல்வேறு கருத்தரங்குகள், பயிலரங்குகளில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரைகளை வாசித்துள்ளார். மதுரைமணி நாளிதழ், திருக்கோயில் மாத இதழ், குருகுலத்தென்றல் மாதஇதழ், கவிச்சூரியன் மின்னிதழ், கல்கி இதழ், தி இந்து - காமதேனு இதழ், விஜயபாரதம் இதழ், வல்லமை மின்னிதழ், பதிவுகள் மின்னிதழ், முத்துக்கமலம் மின்னிதழ், தினமணி நாளிதழ், அருளமுது இதழ், இகரமுதல்வி இதழ், காற்றுவெளி மின்னிதழ், கணையாழி மாத இதழ், பாவையர் மலர் மாத இதழ், கீற்று மின்னிதழ், தமிழ் டாக்ஸ் மின்னிதழ், புன்னகை இதழ், கொலுசு மின்னிதழ், குமுதம் - தீராநதி இதழ், ஆன்மிக மலர் மெயில் புக், தென்றல் மின்னிதழ் (அமெரிக்கா), ஆப்பிரிக்கா தமிழ்ச்சாரல் (கின்சாசா), சஹானா மின்னிதழ், பொம்மி சிறுவர் மாத இதழ் ஆகியவற்றில் தம் படைப்புகளை வெளியிட்டுள்ளார். அரசு உதவி பெறும் கல்லூரி ஒன்றில் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) உதவியுடன் வெளிவந்த பாடப்புத்தகங்களில் இவரது “வைணவம் வளர்த்த தமிழ்”, “ சுருக்கம் தேடும் விரிந்த கவிதைகள்”, சி.சு. செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ நாவல் ஆகிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஆண்டவன் அடித்த மொட்டை (கவிதை நூல்- அமேசான் கிண்டில்), நெய்தலகமும் தும்பைப்புறமும் (ஆய்வு நூல்) ஆகிய நூல்கள் வெளியிட்டுள்ளார். பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளார். பள்ளிகளில் பணியாற்றும் காலத்தில் மனிதஉரிமை, சுற்றுச்சூழல் குறித்த கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார்.
மதுரை, பாரதி யுவ கேந்திரா நிறுவனம் சிறந்த மாணவருக்கான ‘சுவாமி விவேகானந்தர்’ விருது வழங்கியுள்ளது. இவர் படைத்த கவிதை நூல் ஒன்றிற்கு ‘திருப்பூர் இலக்கிய விருது’ பெற்றுள்ளார்.
Read Less...Achievements
உலகில் பிறக்கும் உயிரினங்களுள் தாவர வகைகள் தவிர்த்துப் பிற உயிரினங்கள் அனைத்தும் ஆண்> பெண் இனச்சேர்க்கை மூலமாகவே பிறக்கின்றன. அறிவியல் அடிப்படையில் செயற்கையான பிறப்பு
உலகில் பிறக்கும் உயிரினங்களுள் தாவர வகைகள் தவிர்த்துப் பிற உயிரினங்கள் அனைத்தும் ஆண்> பெண் இனச்சேர்க்கை மூலமாகவே பிறக்கின்றன. அறிவியல் அடிப்படையில் செயற்கையான பிறப்பு ஏற்பட்டாலும் இயற்கையான பிறப்புக்கு ஈடில்லை என்பதை அனைவரும் அறிவர். ஆண்,பெண் இருவரும் இணைந்து இல்லறத்தை நல்லறமாக்கி இனிதான வாழ்க்கை வாழ பிள்ளைப்பேறு இன்றியமையாததாகிறது. பிள்ளைப்பேறானது ஆண்>பெண் இருவரும் காமம் ஏற்பட்டு உடல் சார்ந்த இணைப்பில் ஈடுபட்டு இன்புற்ற வழி சாத்தியமாகிறது. அத்தகைய காமத்திற்குக் கடவுளானவர்; காமன் என்னும் மன்மதன் ஆவார். உயிர்களின் உற்பத்தி காமத்தின் வாயிலாகவே விளைகிறது என்பது உலகறிந்த உண்மையாகும். காமக்கடவுளான மன்மதனும் அவனுடைய மனைவியான ரதியும் இன்றும் சில கிராமங்களில் வழிபடக் கூடிய கடவுளர்களாக உள்ளனர்.
கொங்கு மண்டலமாம் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தைச் சார்ந்த பகுதியாகக் குமரலிங்கம் பேரூராட்சி விளங்குகிறது. சில வருடங்களுக்கு முன்பு வரை கோயமுத்தூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட பகுதியாகக் குமரலிங்கம் பேரூராட்சி திகழ்ந்தது. தமிழுக்காகத் தலை கொடுக்கத் துணிந்த குமண வள்ளல் ஆண்ட புனித பூமியான இவ்வூர் குமணனின் பெயரினை முன்னதாகக் கொண்டு குமணலிங்கம் என்றிருந்து மருவி குமரலிங்கம் என்றானது. அமராவதி ஆற்றங்கரையோரத்தில் செழிப்பானதாக விளங்கும் இவ்வூரில் ஆண்டுதோறும் மாசிமாதம் வளர்பிறை திதியில் காமன் பண்டிகை என்ற பெயரில் மன்மதனுக்கும் ரதிக்கும் விழாவெடுத்துக் கொண்டாடும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. மழை பொழிந்து விவசாயம் செழிக்கவும் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையை பிள்ளைப்பேற்றுடன் பெற்று வாழவும் மன்மதன் - ரதி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
படைப்பினை ஆழ்ந்து நோக்கி, சிறந்த கண்ணோட்டத்தோடு படைப்பு உருவானதன் தேவையை அணுகி அதன் இயல்புகளை வெளிப்படுத்த ஆய்வு தேவையாகிறது. ஏன்? எப்படி? எதற்காக? எனும் கேள்விகள் மனித சி
படைப்பினை ஆழ்ந்து நோக்கி, சிறந்த கண்ணோட்டத்தோடு படைப்பு உருவானதன் தேவையை அணுகி அதன் இயல்புகளை வெளிப்படுத்த ஆய்வு தேவையாகிறது. ஏன்? எப்படி? எதற்காக? எனும் கேள்விகள் மனித சிந்தனைக்குத் தோற்றுவாயாகிறது. இந்த உந்து சக்தியே, சிறந்த படைப்புகளுக்கு அங்கீகாரத்தை வழங்குகிறது. அவ்வகையில் சங்க காலம் தொடங்கி தற்காலம் வரையிலும் படைப்புகளால் தமிழுலகம் கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும் படைப்பினைச் சுவைத்து அதன் இனிமையைப் பறைசாற்றுவதற்கான முயற்சியில் எனது ஆய்வுக் கட்டுரைகள் அமைந்துள்ளன.
மனத்தின் அறிதிறன் கொண்டு கட்டுரைகள் ஆய்வுநெறிக்கண் அமைந்துள்ளன. இலக்கியப் பாடுபொருள்கள் ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒவ்வொரு வகையாக அமைந்திருக்கின்றது. ஆய்வுக்கான அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டு இலக்கிய வெளிச்சம் உலகம் முழுவதும் மேலும் பரவ இக்கட்டுரைகள் வழிகாட்டும் என நம்புகிறேன்.
சங்ககாலம் தொடங்கி தற்காலம் வரையிலும் படைப்பும் ஆய்வும் ஒரு முகத்தின் இரண்டு கண்களாய் இருவேறு காட்சிகளைப் பார்த்துக் கொண்டுதான் வருகின்றது. பல்வேறு காலங்களில் தோன்றிய இ
சங்ககாலம் தொடங்கி தற்காலம் வரையிலும் படைப்பும் ஆய்வும் ஒரு முகத்தின் இரண்டு கண்களாய் இருவேறு காட்சிகளைப் பார்த்துக் கொண்டுதான் வருகின்றது. பல்வேறு காலங்களில் தோன்றிய இலக்கியங்களின் ஒரு சிறு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு ஆய்வுக்கட்டுரையாக, உருவாவதற்கு முயற்சி செய்ததின் பலனாக, “தமிழாய்வுக் கனிகள்” என்ற நூல் படைக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டி என்னும் இந்நூல் வளர்ந்து வரும் மாணவர்களின் அறிவையும் ஆற்றலையும் ஊக்கப்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இக்கதைகள் கல்வியின் இன்றியமையாமையை எடுத்துரைக்
வழிகாட்டி என்னும் இந்நூல் வளர்ந்து வரும் மாணவர்களின் அறிவையும் ஆற்றலையும் ஊக்கப்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இக்கதைகள் கல்வியின் இன்றியமையாமையை எடுத்துரைக்கின்றன.
இன்றைய தொழில்நுட்ப உலகம் பணம் இல்லாத வறுமைச் சூழல் இளைஞர்களை எப்படி வழிநடத்துகிறது என்பதை இக்கதைகள் வெளிப்படுத்துகின்றன.
மாணவர்கள் கல்வி பயின்ற பின்னர் எவ்வகையில் நடந்துகொண்டால் சிறப்பு என்பதையும் இளைஞர்கள் எவ்வாறு சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதையும் சிறுகதைகள் வெளிப்படுத்துகின்றன.
முயற்சி திருவினையாக்கும்> உழைப்பே உயர்வு தரும் என்னும் கதைகள் வெற்றிக்கு வழிகாட்டும் வழிமுறைகளாக அமைகின்றன.
உயிர் தேவதை - உடுமலை கி. ராம்கணேஷ் ' கிளம்பியாச்சா. நேரமாச்சு. சீக்கிரமா கிளம்பு' அருணை அவசரப்படுத்தினான் ரகு. ' Read More...
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.