You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palஉலகில் பிறக்கும் உயிரினங்களுள் தாவர வகைகள் தவிர்த்துப் பிற உயிரினங்கள் அனைத்தும் ஆண்> பெண் இனச்சேர்க்கை மூலமாகவே பிறக்கின்றன. அறிவியல் அடிப்படையில் செயற்கையான பிறப்பு ஏற்பட்டாலும் இயற்கையான பிறப்புக்கு ஈடில்லை என்பதை அனைவரும் அறிவர். ஆண்,பெண் இருவரும் இணைந்து இல்லறத்தை நல்லறமாக்கி இனிதான வாழ்க்கை வாழ பிள்ளைப்பேறு இன்றியமையாததாகிறது. பிள்ளைப்பேறானது ஆண்>பெண் இருவரும் காமம் ஏற்பட்டு உடல் சார்ந்த இணைப்பில் ஈடுபட்டு இன்புற்ற வழி சாத்தியமாகிறது. அத்தகைய காமத்திற்குக் கடவுளானவர்; காமன் என்னும் மன்மதன் ஆவார். உயிர்களின் உற்பத்தி காமத்தின் வாயிலாகவே விளைகிறது என்பது உலகறிந்த உண்மையாகும். காமக்கடவுளான மன்மதனும் அவனுடைய மனைவியான ரதியும் இன்றும் சில கிராமங்களில் வழிபடக் கூடிய கடவுளர்களாக உள்ளனர்.
கொங்கு மண்டலமாம் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தைச் சார்ந்த பகுதியாகக் குமரலிங்கம் பேரூராட்சி விளங்குகிறது. சில வருடங்களுக்கு முன்பு வரை கோயமுத்தூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட பகுதியாகக் குமரலிங்கம் பேரூராட்சி திகழ்ந்தது. தமிழுக்காகத் தலை கொடுக்கத் துணிந்த குமண வள்ளல் ஆண்ட புனித பூமியான இவ்வூர் குமணனின் பெயரினை முன்னதாகக் கொண்டு குமணலிங்கம் என்றிருந்து மருவி குமரலிங்கம் என்றானது. அமராவதி ஆற்றங்கரையோரத்தில் செழிப்பானதாக விளங்கும் இவ்வூரில் ஆண்டுதோறும் மாசிமாதம் வளர்பிறை திதியில் காமன் பண்டிகை என்ற பெயரில் மன்மதனுக்கும் ரதிக்கும் விழாவெடுத்துக் கொண்டாடும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. மழை பொழிந்து விவசாயம் செழிக்கவும் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையை பிள்ளைப்பேற்றுடன் பெற்று வாழவும் மன்மதன் - ரதி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
முனைவர் கி. ராம்கணேஷ்
முனைவர் கி. ராம்கணேஷ் (உடுமலை கி. ராம்கணேஷ்), பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை, பண்பாட்டுக் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் பட்டங்களைப் பெற்றுள்ளார். முதுகலைத் தமிழ் இலக்கியத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். மாநிலப் பேராசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். கல்வியியல் கல்லூரி ஒன்றில் கல்வியியல் (B.Ed) படிப்புப் பயின்றவர். மதுரை, பாரதி யுவ கேந்திரா நிறுவனம் சிறந்த மாணவருக்கான ‘சுவாமி விவேகானந்தர்’ விருது வழங்கியுள்ளது. இவர் படைத்த கவிதை நூல் ஒன்றிற்கு ‘திருப்பூர் இலக்கிய விருது’ பெற்றுள்ளார்.
தனியார்ப் பள்ளிகளில் ஐந்தாண்டுகள் முதுகலைத் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார். பல்வேறு கருத்தரங்குகள், பயிலரங்குகளில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரைகளை வாசித்துள்ளார். மதுரைமணி நாளிதழ், திருக்கோயில் மாத இதழ், குருகுலத்தென்றல் மாதஇதழ், கவிச்சூரியன் மின்னிதழ், கல்கி இதழ், தி இந்து - காமதேனு இதழ், விஜயபாரதம் இதழ், வல்லமை மின்னிதழ், பதிவுகள் மின்னிதழ், முத்துக்கமலம் மின்னிதழ், தினமணி நாளிதழ், அருளமுது இதழ், இகரமுதல்வி இதழ், காற்றுவெளி மின்னிதழ், கணையாழி மாத இதழ், பாவையர் மலர் மாத இதழ், கீற்று மின்னிதழ், தமிழ் டாக்ஸ் மின்னிதழ், புன்னகை இதழ், கொலுசு மின்னிதழ், குமுதம் - தீராநதி இதழ், ஆன்மிக மலர் மெயில் புக், தென்றல் மின்னிதழ் (அமெரிக்கா), ஆப்பிரிக்கா தமிழ்ச்சாரல் (கின்சாசா), சஹானா மின்னிதழ், கோடுகள் மின்னிதழ், பொம்மி சிறுவர் மாத இதழ் ஆகியவற்றில் தம் படைப்புகளை வெளியிட்டுள்ளார். அரசு உதவி பெறும் கல்லூரி ஒன்றில் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) உதவியுடன் வெளிவந்த பாடப்புத்தகங்களில் இவரது “வைணவம் வளர்த்த தமிழ்”, “ சுருக்கம் தேடும் விரிந்த கவிதைகள்”, சி.சு. செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ நாவல் ஆகிய கட்டுரைகள் பாடங்களாக இடம் பெற்றுள்ளன. ஆண்டவன் அடித்த மொட்டை (கவிதை நூல் - அமேசான் கிண்டில்), நெய்தல் திணையும் மக்களின் உளப்பாங்கும் (ஆய்வு நூல்), நெய்தலகமும் தும்பைப்புறமும் (ஆய்வு நூல்), வழிகாட்டி (சிறுகதைக்கதம்பம்), தமிழாய்வுக் கனிகள் (ஆய்வு நூல்), தமிழாய்வு மணிகள் (ஆய்வு நூல்) ஆகிய நூல்கள் வெளியிட்டுள்ளார். பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளார். பள்ளிகளில் பணியாற்றும் காலத்தில் மனிதஉரிமை, சுற்றுச்சூழல் குறித்த கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். படைப்புலகில் சாதிக்க வேண்டும் என்னும் நோக்கோடு கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் எழுதி வருகிறார்.
தற்போது பொள்ளாச்சியில் சுயநிதிக்கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
The items in your Cart will be deleted, click ok to proceed.