Share this book with your friends

Sirukathaigal Ettu / சிறுகதைகள் எட்டு உங்கள் பயணத்தின் சுவாரஸ்யமான நண்பன்

Author Name: Kesavan Raghavan | Format: Hardcover | Genre : Literature & Fiction | Other Details

ஒரு நல்ல சிறுகதை எப்படி இருக்கனும்னு என்ன கேட்டா, நான் இப்படித்தான் சொல்லுவேன்.

“ஒரு சிறுகதைங்கறது சுருக்கமா சொல்ல போனா பீச்சுல வாங்குன சுண்டல்ல கிடைச்ச மங்கா துண்டு மாதிரி இருக்கணும். "ம்ம்ம்ம். ஒரு உதாரணமா, நீங்க பீச்சுக்கு போயிருப்பீங்க. அங்க காத்து வாங்க போகலாம்னு தான் போவீங்க. அப்படியே, ஒரு சின்ன சுண்டல் பொட்டலம் வாங்கி சாப்பிடுவீங்க. அந்த மணல் பரப்பு, அலை ஓசை, நல்ல வீசற காத்து, இதுக்கு தோதா ஒரு சுண்டல் எவ்வளவு சுகமா இருக்கும். ஒரு சில வினாடிகளில் நம்மள வேறு ஒரு உலகத்துக்கு கூட்டிட்டு போயிடும். அதுலயும் கடைசியில ஒரு சின்ன மாங்கா துண்டு கெடச்சுதுன்னா எவ்வளவு சந்தோஷமா இருக்கும். அத எடுத்து வாயில போட்டு மெல்லுவீங்களே. அது ஒரு தனி சுகம். அந்த சின்ன மாங்கா துண்டு ஒங்க நாக்குல துருத்திக்கிட்டே இருக்குமே. அந்த மாதிரி தான் சிறுகதைகள் இருக்கணும். படிச்சி முடிச்ச பிறகும், அதுல ஒரு ஸ்பெஷல் உணர்வு கிடைக்கணும்.”

அந்த மாதிரி சின்ன சின்ன கதைகளின் தொகுப்பு தான் இந்த புத்தகம். 

இதுல நகைச்சுவை, அரசியல் நையாண்டி, ஆன்மீக குருவின் அறிவுரை, அப்பா மகன் உறவு கணவன் மனைவி போட்டி, அப்படின்னு சொல்லியிருக்கற ஒவ்வொரு கதையும் ஒரு சின்னஞ்சிறு உலகத்தப்ப்பத்தினது. இன்றைய நிதர்சன வாழ்க்கையின் பிரதிபலிப்பு, இதுல இருக்கும்.

கண்டிப்பா, இதுல இருக்கற கதைகள் எல்லாமே உங்கள வேற ஒரு சின்ன உலகத்துக்கு கூட்டிட்டு போய் விடும். அதை நீங்க ரசிப்பீங்கன்னு நம்பறேன்.

Read More...
Hardcover
Hardcover 230

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கேசவன் ராகவன்

கேசவன் ஒரு வளர்ந்து வரும் எழுத்தாளர். அவருடைய எழுத்துப்பணி ஒரு நாடக ஆசிரியராக தொடங்கியது. ‘லீகலி யூவர்ஸ்’ (Legally Yours) தயாரிப்பில் அவர் முதன் முதலில் எழுதிய "சாம்பார் வாளி - சாம்பு" என்ற மேடை நாடகம் மைலாப்பூர் ஆர்ட்ஸ் அகாடமியின் 2020-ஆம் ஆண்டிற்கான சிறந்த நகைச்சுவை மேடை நாடகம் என்று பாராட்டப்பட்டு சுழற்கோப்பையை வென்றது. அவர் எழுதிய மற்றுமொரு நாடகமான "பக்குன்னு பத்திக்கிச்சு" 2023-ல் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் 32-வது  கோடை நாடக விழாவின் சிறந்த நாடகமாகவும், சிறந்த வசனத்திற்கான இரண்டாம் பரிசையும் வென்றது. நாடக ஆசிரியராக மட்டும் இல்லாமல் அவர் சிறுகதைகள் மற்றும் “தமிழ் ஹைக்கூ” கவிதைகளை எழுதியுள்ளார். அவர் எழுதிய நாடகங்களில் அவரே மேடையில் தோன்றி சில காட்சிகளில் நடிக்கவும் செய்துள்ளார். இப்படி பன்முகத்தன்மை கொண்ட அவரின் தொகுப்பில் முதலாவது பதிப்பே "சிறுகதைகல் எட்டு" என்ற இந்த சிறுகதைகள் புத்தகம். இவர் தன்னுடைய சிறுகதைகள் மற்றும் கவிதைகளில், பண்பாடு, கலாச்சாரம், மனிதநேயம், இயற்கை, நகைச்சுவை, குடும்ப உறவு என்று பல்வேறு பரிமாணங்கள் தொட்டு எழுதியுள்ளார். இதற்க்கு இந்த 'சிறுகதைகள் எட்டு' என்ற இந்த தொகுப்பே ஒரு சான்று.

Read More...

Achievements

+4 more
View All