Share this book with your friends

Siraar Super Kathaigal / சிறார் சூப்பர் கதைகள் நீதி கதைகள்

Author Name: Vadhool | Format: Paperback | Genre : Children & Young Adult | Other Details

என் இனிய சிறார்களுக்கு இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள். நீதிக்கதைகள் என்பது சிறார்களின் வாழ்வை அருமையாக செப்பனிடும் ஒரு தெய்வீகப்பணி. அதை செய்ததில் நான் மட்டற்ற மகிழ்ச்சி  அடைகிறேன். ஓவ்வொரு கதையின் தாக்கமும் உங்களின் வாழ்வின் முன்னேற்றத்தை நிச்சயம் உறுதிப்படுத்தும்  என்பது   என் அசைக்க முடியாத நம்பிக்கை. அடுத்தவர் மீது பொறாமை படுவதால் நம் உள்ளம் தான் பாதிக்கப்படுமே ஒழிய அதனால் எந்த முன்னேற்றமும்  ஏற்படாது என்பதை என் முதல் கதையிலேயே கூறியிருக்கிறேன். அதே போல் தான் நம் வீட்டில் இருக்கும் முதியோர்களையும் நாம் வளர்க்கும் கால் நடைகளையும்  எப்படி பேணி அன்பு காட்ட வேண்டும் என்றும், தவறு  செய்த யாவருக்கும் ஒரு நல்ல சந்தர்ப்பம் அளித்தால் நிச்சயம்  எந்த சிறாரும்  தவறு செய்திருந்தால் கூட திருந்துவார்கள் என்று “எழில் திருந்தினான் எப்படி” என்ற கதையில் கூறியிருக்கிறேன். அதேபோல் காட்டு விலங்குகள் பற்றியும் சற்று வேடிக்கையாகவும் அதே சமயம் கதையின் வாயிலாக சமயோஐpதத்தின் முக்கியத்தையும் காட்டின் வளம் அழியாமல் இருக்க வேண்டும் என்றால் வன விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தையும்  ஆழமாக கூறியிருக்கிறேன். என் அன்பு சிறார்கள் கதைகளை ஆழமாக படித்து வாழ்வை மேம்படுத்திக்கொள்ள என் இதயபூர்வ நல் வாழ்த்துக்கள்.

Read More...
Paperback
Paperback 499

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

" வாதூல் "

ஆசிரியர் குறித்து...

இந்நூலின் ஆசிரியர் .  இயற்பெயர் G.சுப்பிரமணியன். நாற்பது ஆண்டுகளாக சிறார்களுக்காக சிறுகதைகளும் தொடர்கதைகளையும் எழுதி வரும் அன்னாரின் முதல் தொடரான “ மாந்தோப்பு ராட்சதன் ” சிறுவர் மலரில் வெளியாகி இவருக்கு பெருமை சேர்த்தது. அடுத்து தொடர்ச்சியாக இரத்தினகிரீட இரகசியம மாவீரன் மல்லன் மர்மத்தீவு,   கி.பி 3003, பொக்கிஸம், ஆவிகள் இல்லையடி பாப்பா போன்ற பல தொடர்கள் சிறுவர்மலரிலேயே வெளிவந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரின் துப்பறியும் தொடரான “துப்பறியும் சுட்டீஸ்” மற்றும் மர்மத்தொடரான “காட்டு பங்களா” காலைக்கதிர் சிறுவர் இதழில் பிரசுரமானதும் ஆசிரியரின் எழுத்துக்கு பெருமை சேர்ப்பதாகும். பூரணி
வர்தினி மற்றும் தன் சொந்த பெயரிலும் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதி இருக்கிறார். அவைகள் தமிழ் சிறுவர் வார மற்றும் மாத இதழ்களிலும் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சிறார்கள் நலனில் அதிக அக்கரை காட்டும் ஆசிரியா, பல கிராம பள்ளிகளுக்கு சென்று நீதிக்கதைகள் நேரிடையாகவே கூறி அவர்களை உற்சாகப்படுத்தும் வண்ணம் பரிசுப்பொருட்களையும் வழங்கி தன் பணியை செவ்வனே செய்திருக்கிறார். 
இவர் “ அழகு  ராஐனும் மந்திரவாதியும் ” மற்றும் “ இரண்டாவது சுதந்திரம் ”  என்று இரண்டு சிறார் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். அது தவிர சிறார்களுக்கு கதைகளை நேரிடையாக கூறும் விதமாக யூ டியூப் சேனல்கள் ஆரம்பித்து ஐநூறுக்கும் மேற்பட்ட நீதிக்கதைகளை கூறியிருக்கிறார். அதில் இந்தி மற்றும் சம்ஸ்கிருத கதைகளும் அடங்கும். அவர் யு டியூப் சேனல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சிறார்கள் அதில் பயணித்து பயன் பெற வேண்டுகிறோம்.

1.suppini thatha siruvar kathaigal

2.suppinithathavin chuttis kathaigal

3.Hindi Stories – Children – Dhadha

4.Mannai Murugan Touring Talkies


மேற் சொன்ன அணைத்து சேனல்களுமே சிறார்களுக்காக இருந்தாலும் நான்காகவது சேனல் பெரியோர்களுக்கான சமூக கதைக்கானது என்பது ஆசிரியரின் பன் முக பார்வைக்கான எடுத்துக்காட்டாக உள்ளது.
இவரின் மூன்று சிறு நாடகங்கள் திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்திலும் வெளியாகி  உள்ளது ஒரு சிறப்பு அம்சமாகும்.
ஆசிரியர் பணி தொடர வாழ்த்துவோம்.

Read More...

Achievements

+5 more
View All