Share this book with your friends

Parables of Jesus / இயேசுவின் உவமைகள் சமூக நீதிக்கான ஓர் தேடல்

Author Name: P. Kanagaraj | Format: Paperback | Genre : Religion & Spirituality | Other Details

இயேசுவின் உவமைகள்: சமூக நீதிக்கான ஓர் தேடல் 
எனும் இந்நூல் கிறிஸ்தவ குமுகாயத்திற்காக எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் கிறிஸ்தேசுவின் உவமைகள் இடம்பெறுகின்றன. அவை எழுதப்பட்டச் சூழலை கருத்தில் கொண்டு, நாம் எப்படி அவற்றை நம் சூழலில் விளங்கிக் கொள்ளவேண்டும் என்பதற்கான ஒரு முயற்சியாக அமைந்திருக்கிறது இந்நூல். இறையாளுகையின் விழுமியங்களை தன்னகத்தே கொண்டுள்ள இயேசுவின் உவமைகள் கிறிஸ்தவர்களை சமுக, அரசியல், பொருளாதார நிலைகளில் நீதியை நிலைநாட்டவும், சமத்துவத்தை உயர்த்திப் பிடிக்கவும், இறையரசின் முன்ருசியாக திருச்சபையை உருவாக்கவும் உந்தித்தள்ளும் ஆற்றல்மிகு இலக்கியமாக ஒத்தமை நற்செய்தி நூல்களில் இடம் பெற்றுள்ளன என்பதை இந்நூல் சிறப்பாக வெளிக்காட்டுகிறது. இந்நூலில்  இயேசுவின் உவமைகளை எளிமையாகவும் சமூக அறிவியல் பார்வையில் படித்து விளங்கிக் கொள்ளவும் சிறப்பாக ஆசிரியரால் எழுத்தாளப்பட்டுள்ளன.

Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

அருட்பணி.பெ.கனகராஜ்

இந்நூலின் ஆசிரியர் அருள்பணி.பெ.கனகராஜ், காஞ்சிபுரம் மாவட்டம், தென்னேரி கிராமத்தைச் சேர்ந்தவர். காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் ஒருங்கிணைந்த  ஐந்தாண்டு முதுகலை கணிணி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பயின்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாக  முதுகலை பட்டம் பெற்றவர். தென்னிந்தியத் திருச்சபை, சென்னைப் பேராயத்தால் 2013 ஆம் ஆண்டு ஆயர் திருப்பணிக்காகத் தெரிவு செய்யப்பட்டு, மதுரை அரசரடி தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் நான்கு ஆண்டு (2014-2018) இறையியல் கல்வி பயின்று, கொல்கத்தாவில் உள்ள செராம்பூர் பல்கலைக்கழகத்தின் வழியாக இளந்தேவியல் பட்டம் பெற்றவர். தனது இறையியல் படிப்பில் செராம்பூர் பல்கலைக்கழக அளவில் முதலிடமும், சமயப் பாடப்பிரிவில் முதலிடமும் பெற்றவர். விவிலிய எபிரேய மொழி மட்டுமன்று விவிலிய கிரேக்க மொழியிலும் சிறப்புப் பயிற்சி பெற்றவர். இந்நூலுக்கு முன்பு "இயற்கை பேசினால்" மற்றும்  “விவிலிய எபிரேய அடிப்படை இலக்கணம்” எனும்  நூல்களையும்  எழுதியுள்ளார். தற்போது தென்னிந்தியத் திருச்சபை, சென்னைப் பேராயத்தில் ஆயராக அருட்பொழிவுப் பெற்றுத் திருப்பணியாற்றுகிறார்.

Read More...

Achievements

+6 more
View All