Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palஇந்நூலின் ஆசிரியர் அருள்பணி.பெ.கனகராஜ், காஞ்சிபுரம் மாவட்டம், தென்னேரி கிராமத்தைச்சேர்ந்தவர். காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலைகணிணி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பயின்று சென்Read More...
இந்நூலின் ஆசிரியர் அருள்பணி.பெ.கனகராஜ், காஞ்சிபுரம் மாவட்டம், தென்னேரி கிராமத்தைச்சேர்ந்தவர். காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலைகணிணி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பயின்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாக முதுகலை பட்டம் பெற்றவர். தென்னிந்தியத் திருச்சபை, சென்னைப் பேராயத்தால் 2013 ஆம் ஆண்டு ஆயர் திருப்பணிக்காகத் தெரிவு செய்யப்பட்டு, மதுரை அரசரடி தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் நான்கு ஆண்டு (2014-2018) இறையியல் கல்வி பயின்று, கொல்கத்தாவில் உள்ள செராம்பூர் பல்கலைக்கழகத்தின் வழியாக இளந்தேவியல் பட்டம் பெற்றவர். தனது இறையியல் படிப்பில் செராம்பூர் பல்கலைக்கழக அளவில் முதலிடமும், சமயப் பாடப்பிரிவில் முதலிடமும் பெற்றவர். விவிலிய எபிரேய மொழி மட்டுமன்று விவிலிய கிரேக்க மொழியிலும் சிறப்புப் பயிற்சி பெற்றவர். இந்நூலுக்கு முன்பு "இயற்கை பேசினால்" என்ற நூலையும் எழுதியுள்ளார். தற்போது தென்னிந்தியத் திருச்சபை, சென்னைப் பேராயத்தில் ஆயராக அருட்பொழிவுப் பெற்றுத் திருப்பணியாற்றுகிறார்.
Read Less...Achievements
பேசும் புத்தகம் எனும் இந்நூல் கிறிஸ்தவ குமுகாயத்திற்காக எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் கருத்தாழமிக்க இறையியலை அள்ளித்தரும் அருளுரைகள் இடம் பெறுகின்றன. தலைப்பு மற்றும் கர
பேசும் புத்தகம் எனும் இந்நூல் கிறிஸ்தவ குமுகாயத்திற்காக எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் கருத்தாழமிக்க இறையியலை அள்ளித்தரும் அருளுரைகள் இடம் பெறுகின்றன. தலைப்பு மற்றும் கருப்பொருள் சார்ந்த அருளுரைகளும், சிறப்பு நாட்களுக்குரிய அருளுரைகளும், லெந்துகால வெள்ளிக்கிழமை மாலை தியானங்களும், கிறிஸ்து இயேசு மொழிந்த ஏழு சிலுவை மொழிகளும் இந்நூலில் இடம்பெறுகின்றன. இந்த புத்தகம் சமூகநீதியைப் புரிந்துகொள்ளவும் கிறிஸ்துவின் சீடர்களாய் சான்று பகிரவும் நம் உள்ளுணர்வை கொழுந்துவிட்டு எரியச்செய்யும் அருளுரைகளை உள்ளடக்கியிருக்கும் ஒருநூல். எக்காலத்தும் பேசிக் கொண்டேயிக்கும் ஒரு புத்தகம் ஆகும். இயேசு கிறிஸ்துவை தெய்வீக நிலையில் மட்டும் புரிந்து கொள்ளாமல் சமூக செயற்பாட்டாளராக புரிந்து கொள்ளவும், இறையரசு வளர்ந்து அமைதியும் அன்பும் நிலை நாட்டப்படுவதற்கு, நம்மை கருவிளாக அர்ப்பணிக்கத் தூண்டும் அருட்செய்திகளை இந்நூல் உள்ளடக்கியிருக்கிறது. திருச்சபை ஆயர்களுக்கும், அருளுரைஞர்களுக்கும் உதவும் சிறப்பான கையேடு எனலாம்.
இயேசுவின் உவமைகள்: சமூக நீதிக்கான ஓர் தேடல்
எனும் இந்நூல் கிறிஸ்தவ குமுகாயத்திற்காக எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் கிறிஸ்தேசுவின் உவமைகள் இடம்பெறுகின்றன. அவை எழுதப்பட்
இயேசுவின் உவமைகள்: சமூக நீதிக்கான ஓர் தேடல்
எனும் இந்நூல் கிறிஸ்தவ குமுகாயத்திற்காக எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் கிறிஸ்தேசுவின் உவமைகள் இடம்பெறுகின்றன. அவை எழுதப்பட்டச் சூழலை கருத்தில் கொண்டு, நாம் எப்படி அவற்றை நம் சூழலில் விளங்கிக் கொள்ளவேண்டும் என்பதற்கான ஒரு முயற்சியாக அமைந்திருக்கிறது இந்நூல். இறையாளுகையின் விழுமியங்களை தன்னகத்தே கொண்டுள்ள இயேசுவின் உவமைகள் கிறிஸ்தவர்களை சமுக, அரசியல், பொருளாதார நிலைகளில் நீதியை நிலைநாட்டவும், சமத்துவத்தை உயர்த்திப் பிடிக்கவும், இறையரசின் முன்ருசியாக திருச்சபையை உருவாக்கவும் உந்தித்தள்ளும் ஆற்றல்மிகு இலக்கியமாக ஒத்தமை நற்செய்தி நூல்களில் இடம் பெற்றுள்ளன என்பதை இந்நூல் சிறப்பாக வெளிக்காட்டுகிறது. இந்நூலில் இயேசுவின் உவமைகளை எளிமையாகவும் சமூக அறிவியல் பார்வையில் படித்து விளங்கிக் கொள்ளவும் சிறப்பாக ஆசிரியரால் எழுத்தாளப்பட்டுள்ளன.
“விவிலிய எபிரேய அடிப்படை இலக்கணம்” எனும் இந்நூல் தமிழ்வழி இறையியல் கல்வி பயிலும் மாணக்கர், எபிரேய மொழியின் அடிப்படை இலக்கணத்தை கற்க உதவும் நூலாகும். விவிலிய எபிரேய இல
“விவிலிய எபிரேய அடிப்படை இலக்கணம்” எனும் இந்நூல் தமிழ்வழி இறையியல் கல்வி பயிலும் மாணக்கர், எபிரேய மொழியின் அடிப்படை இலக்கணத்தை கற்க உதவும் நூலாகும். விவிலிய எபிரேய இலக்கணத்தை கற்க ஆங்கில நூல்கள் பல எழுதப்பட்டுள்ளன. ஆனால் இந்நூல் தமிழில் எழுதப்பட்டிருக்கிற முதல் நூலாகும். இந்நூலில் இடம்பெறும் எளியப் பயிற்சிகளும் அதற்குரிய விடைகளும் ஆசிரியர் உதவி இல்லாமலும் மாணவர்கள்
பயிற்சி செய்து எளிமையாக கற்றிட உதவும் வகையில் எழுதப்பட்டுள்ளன. நாற்பது வகுப்புகளில் எபிரேய இலக்கண அறிமுகத்தை ஆசிரியர்கள் கற்றுத்தர
உதவும் கையேடாகும். செராம்பூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தின் படி பாடங்களும் பயிற்சிகளும் அமைக்கப் பெற்றிருக்கின்றன. இறையியல் கல்வி
பயிலும் மாணவர்களுக்கு மட்டுமன்றி திருவிவிலிய ஆய்வில் ஆர்வமுடையவர், அருளுரைஞர், விவிலிய எபிரேய மொழியில் ஆர்வமுடைய எல்லோருக்கும்
பயனுள்ள வகையில் எழுதப்பட்டுள்ள முதல் தொகுதியாகும். தேவைப்படும் இடங்களில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இணைத்து எழுதப்பட்டுள்ள பாடங்களும், பயிற்சிகளும் அதற்குரிய விடைகளும், புதியச் சொற்களும் எபிரேய இலக்கணத்தை பிழையற கற்க உதவும் சிறப்பான நூலாக மாற்றியிருக்கிறது.
ஒரு ஊரில் புத்தரை பின்பற்றுகிறவர் ஒருவர் இருந்தார். அவர் புத்தரது போதனைகளை மிகவும் மதித்தார். புத்தரை பற்றியு Read More...
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.