You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palபெர்சனாலிட்டியின் சக்தியைப் பயன்படுத்தி ஆனந்தமாய் வெற்றி அடைவோம்!
வெற்றி பெற்ற தருணங்களில் மட்டும் கிடைப்பது உண்மையான மகிழ்ச்சி இல்லை. நம் பயணம் முழுவதும் உடன் வந்து நாம் தொய்வடையும் போதும் உற்சாகத்தைக் கொடுப்பதுதான் உண்மையான மகிழ்ச்சி.
எனில் அந்த மகிழ்ச்சி எங்கிருந்து கிடைக்கும்? இந்தக் கேள்விக்கான விடைதான் JoyQ – ஒருவரின் Joyous Quadrant. ஒருவர் அவரது ஆனந்தக் கட்டத்தில் இருந்து வேலைகளை செய்யும் போது அவரது intrinsic motivation செயல்பட ஆரம்பிக்கிறது. இந்த உள்ளார்ந்த உந்துசக்தியே மகிழ்ச்சியின் அடிப்படை.
இந்தப் புத்தகம் – ஒரு தொழில் முனைவோர் எப்படி தன் JoyQவைக் கண்டுபிடித்து, அதற்கான வேலைகளை மட்டுமே செய்வதன் மூலம், தான் மகிழ்ச்சியாய் இருப்பது மட்டும் இல்லாமல் தன் நிறுவனத்தையும் ஆனந்தமான நிறுவனமாக மாற்றி, இய்ல்பாக வெற்றிகள் பெறமுடியும் என்று விளக்குகிறது.
எல் எஸ் கண்ணன்
எல்.எஸ்.கண்ணன், லீன் சிக்ஸ் சிக்மா மற்றும் Strategy Consultant ஆக இருக்கிறார். மேலும் இந்தத் துறைகளில் பயிற்சியாளராகவும், எழுத்தாளராகவும் விளங்கும் இவர், 23+வருடங்கள் தொழில் அனுபவமும் 15+ ஆண்டுகள் consulting அனுபவமும் நிறைந்தவர். CSense Management Solutions என்ற Consulting நிறுவனத்தின் Founder மற்றும் CEO ஆகவும், Business Champions Academyயின் நிறுவனர்.
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் லீன் சிக்ஸ் சிக்மா கைசென் திட்டங்களை செயல்படுத்தியும், 400 க்கும் மேற்பட்ட பயிற்சிகளை வழங்கியும் பல நிறுவனங்களுக்கு செயல்திறன் மற்றும் தரநிலைகளை மேம்படுத்த உதவுகிறார். சிறு நிறுவனங்கள் corporate நிறுவனங்களாக வளரும் பாதையில் அவர்களுக்கு strategy மற்றும் system development Consulting வழங்கி வருகிறார்.
ஒரு சிந்தனையாளராக, நமக்கான அறிவு அன்னிய மண்ணிலிருந்து வர வேண்டியதில்லை என்ற நம்பிக்கையுடன் கேட்பவர்களை ஊக்குவிக்கிறார்.
The items in your Cart will be deleted, click ok to proceed.