Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palமெலட்டூர்.இரா.நடராஜன் பாரம்பரியம் மிக்க இசைக்கும், பரதத்திற்கும் பெயர் போன தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மெலட்டூர் என்ற அழகிய கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். இவரது சிறுகதைகள் பெரும்பாலான முன்னணி தமிழ் இதழ்களில் வெளியாகி பேRead More...
மெலட்டூர்.இரா.நடராஜன்
பாரம்பரியம் மிக்க இசைக்கும், பரதத்திற்கும் பெயர் போன தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மெலட்டூர் என்ற அழகிய கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்.
இவரது சிறுகதைகள் பெரும்பாலான முன்னணி தமிழ் இதழ்களில் வெளியாகி பேரும் புகழும் ஈட்டியிருக்கின்றன.
மனித நேயம், உறவுகளின் மேன்மை, நமது கிராமிய கலாச்சாரம் ஆகியவைகளை நுட்பமான உணர்வுகளோடு, எளிய எழுத்துக்களில் வடித்திருக்கிறார்.
தேசிய அளவிலான வங்கி ஒன்றில் மேலதிகாரியாக பணியாற்றிக் கொண்டு, பலவிதமான இலக்கியப் பணியை தொடர்ந்து செய்து வருபவர்.
இவர், சிறுகதைகளைத் தவிர பல சமுதாய/அரசியல்/ஆன்மீக கட்டுரைகள், கவிதைகள், மேடை நாடக/குறும்பட ஸ்கிரிப்டுகள் எழுதியிருக்கிறார்.
Read Less...Achievements
தஞ்சையை அடுத்த மெலட்டூர் கிராமம் என்றாலே உடன் ஞாபகத்துக்கு வருவது பாகவத மேளா நாட்டிய நாடகம்தான். இந்த தொண்மையான கலையை உலகறிய கொண்டு சேர்த்த யுக புருஷர் பரதம் ஸ்ரீ எஸ். நடர
தஞ்சையை அடுத்த மெலட்டூர் கிராமம் என்றாலே உடன் ஞாபகத்துக்கு வருவது பாகவத மேளா நாட்டிய நாடகம்தான். இந்த தொண்மையான கலையை உலகறிய கொண்டு சேர்த்த யுக புருஷர் பரதம் ஸ்ரீ எஸ். நடராஜன் அவர்கள். தன் பால்ய வயதில் பாகவத மேளாவுக்காக சலங்கை கட்டிய அவரது கால்கள், இறுதி மூச்சு வரை ஆடிக் கொண்டேதான் இருந்தன. அவரது சொல்லும், செயலும், சிந்தனையும், மூச்சுக் காற்றும் பாகவத மேளாவின் ஏற்றத்துக்காகவே இயங்கின. தமிழக அரசின் கலைமாமணி விருதும், மத்திய அரசின் சங்கீத் நாடக அகாதமியின் விருதும் அவரின் மேன்மைக்கு சிறப்பு சேர்த்தன. தான் பெற்ற இந்த அரிய கலையை, இந்த மண்ணின் மக்களுக்கே எந்த வணிக நோக்கமும் இல்லாமல் திருப்பி வழங்க வேண்டும் என்கிற சிந்தனையில் அவர் எடுத்த பெரும் பணி மகத்தானது. இன்றைக்கு மெலட்டூர் கிராமத்தில் வசிக்கும் 70க்கும் மேற்பட்ட ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களில் பரதம் தெரிந்த குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு முழு முதற் காரணம் பரதம் ஸ்ரீ எஸ். நடராஜன் அவர்கள். அவர் ஆடி ஆடி அகம் கரைந்தார், இசை பாடிப் பாடி கண்ணீர் மல்கினார். நாடி நாடி நரசிங்கரே, அவரோடு எப்போதும் இருந்தார். அந்த நரசிங்க பாட்டையில், அவர் உணர்ந்த தெய்வீக அனுபவங்கள் நமக்கு புதிய வெளிச்சத்தை கொடுக்கும் என்று உயர்வாக எண்ணுவோமாக.
நம் சனாதன தர்மம் என்பது ஒரு தத்துவமான வாழ்வு முறை. அதில் அளவிடமுடியாத ஆழ்ந்த கருத்துக்கள் இருக்கிறன. அதிலிருந்து சிலவற்றை எடுத்து இந்த நூல் விவாதிக்கிறது. கடவுள் இருக்கிற
நம் சனாதன தர்மம் என்பது ஒரு தத்துவமான வாழ்வு முறை. அதில் அளவிடமுடியாத ஆழ்ந்த கருத்துக்கள் இருக்கிறன. அதிலிருந்து சிலவற்றை எடுத்து இந்த நூல் விவாதிக்கிறது. கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற கருத்த்தில் ஒரு முழுமையான விளக்கம் இருக்கிறது. தந்தையும் தாயும் எவ்வளவு விஷேஷமானவர்கள். அவர்களை பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்று ஒரு விளக்க அத்தியாயம் இருக்கிறது. நான்கு வேதங்களிலும் காணப்படுவது புருஷ ஸூக்தம். அதை மிக எளிமையாக வார்த்தைக்கு வார்த்தை அர்தம் கொடுத்துள்ளது இந்த புத்தகம்.
எனக்கு குட்டிக் கதைகள் எழுத ரொம்ப பிடிக்கும். சுருங்கச் சொல்லும் பாணி எனக்கு ரொம்ப மகிழ்ச்சியை தருகிறது.
ஒரு மையக் கருவை எடுத்துக் கொண்டு, விறுவிறுவென கதையை கொண்டு போ
எனக்கு குட்டிக் கதைகள் எழுத ரொம்ப பிடிக்கும். சுருங்கச் சொல்லும் பாணி எனக்கு ரொம்ப மகிழ்ச்சியை தருகிறது.
ஒரு மையக் கருவை எடுத்துக் கொண்டு, விறுவிறுவென கதையை கொண்டு போய், அலுப்புத் தட்டாமல் வார்த்தை சிக்கனத்துடன் பளிச்சென முடிக்கும் போது அதில் ஒரு நிறைவை காண்கிறேன்.
வாசகனுக்குள் குறைந்த நேரத்தில் ஒரு தாக்கத்தை உண்டாக்க்கிவிட வேண்டும் என்ற குறிக்கோளை எனது பெரும்பான்மையான குட்டிக் கதைகள் வெற்றிகரமாக செய்திருக்கின்றன என்பதை என்னால் நிச்சயமாக சொல்ல முடியும்.
இந்த அகஸ்திய குழந்தைகள், கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது மாதிரி, நீளத்தில்தான் குறைவே தவிர உங்களை முழுமையாக திருப்திபடுத்தும் என்றே நினைக்கிறேன்.
ஒரு எழுத்தாளனின் ஒவ்வொரு ஆக்கமும் கிட்டத்தட்ட பிரசவம் மாதிரிதான். அவன் மூளையில் மின்னலென கதையின் கரு உதயமாகிவிட, அதன் பிறகு அவன் படும் அவஸ்தைகள் ஏராளம். விறுவிறுப்பான தொட
ஒரு எழுத்தாளனின் ஒவ்வொரு ஆக்கமும் கிட்டத்தட்ட பிரசவம் மாதிரிதான். அவன் மூளையில் மின்னலென கதையின் கரு உதயமாகிவிட, அதன் பிறகு அவன் படும் அவஸ்தைகள் ஏராளம். விறுவிறுப்பான தொடக்க வார்த்தைகள், தெளிந்த நீரோடை மாதிரி வளைந்து நெளிந்து செல்லும் மையப்பகுதி, நெத்தியடியான கடைசி வாக்கியம் என்று அவனுக்குள் எண்ணங்கள் கூழாங்கற்களை போல உருண்டு கொண்டே இருக்கும். எல்லாம் சரியாக அமைந்துவிட்ட வேளையில் அது எழுத்து வடிவம் பெற்றுவிடும்.
அதை அவன் வாசகர்கள் பாராட்டிச் சொல்லும்போது ஒரு தாயைப்போல அவன் மகிழ்ந்து போகிறான்.
இந்த தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையும் வேறு வேறு களங்களில் நடப்பது ஒரு சிறப்பு அம்சமாகும். .
முதல் ஐந்து அத்தியாயங்களும் உங்களுக்கு நிச்சயம் நகைச்சுவை விருந்து அளிக்கும்.
எதிரும் புதிரும் என்கிற கதையில் இன்றைய காலகட்ட கணவன் மனைவிமார்களுக்கு இடையே எழும் முரண்பாடுகளை எடுத்து காட்டுகிறது.
ரெண்டும் ஒன்னு என்கிற கதை உங்களை நிச்சயம் சிந் திக்க வைக்கும்.
தலைச்சன் மற்றும் சந்தோஷத் தீவு என்கிற கதைகள் எதிர்காலச் சூழலைச் சொல்லி உங்களை இக்கால சீர்கேட்டை சிந்திக்க வைக்கும்
உறவுகளின் மேன்மை, அறம் சார்ந்த நம் பன்பாட்டு விழுமியங்கள், சமூக சிக்கல்கள் ஆகியவைகளை சொல்லும் கதைகளுக்கு என்றுமே ஆதரவு உண்டு.
இந்த புத்தகத்தில் உள்ள பத்து கதைகளும் உ
உறவுகளின் மேன்மை, அறம் சார்ந்த நம் பன்பாட்டு விழுமியங்கள், சமூக சிக்கல்கள் ஆகியவைகளை சொல்லும் கதைகளுக்கு என்றுமே ஆதரவு உண்டு.
இந்த புத்தகத்தில் உள்ள பத்து கதைகளும் உங்கள் மனதை தொடும் என்று நிச்சயம் நம்புகிறேன்.
சில ரகசியங்கள் என்கிற கதை ஆனந்த விகடனில் வந்த போது நிறைய பேர் தங்களது மாமாவை அடையாளம் கண்டு கொண்டார்கள்.
எருமை சவாரியில் இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்கிற சுயநல பார்வையை கேள்வியில் வைக்கிறது.
ஆட்டோ கதையில் சினிமா எப்படி பாமர மக்களை சுரண்டுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
அண்டங்க்காக்கை கதை தோல்வி கண்ட ஒரு சினிமாக்காரனின் வலியை படம் பிடித்து காட்டுகிறது
அனைத்து கதைகளும் உங்களை திருப்தி படுத்திவிட்டால் அதை எனது வெற்றியாக கருதுவேன்
மற்ற கதைகளை விட க்ரைம் கதைகள் வெகு ஜன மக்களை சீக்கிரம் ஈர்க்கின்றன. விறுவிறுப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் அதன் கோட்பாடு.
இந்த தொகுப்பில் உள்ளவை அனைத்தும் உங்களை திர
மற்ற கதைகளை விட க்ரைம் கதைகள் வெகு ஜன மக்களை சீக்கிரம் ஈர்க்கின்றன. விறுவிறுப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் அதன் கோட்பாடு.
இந்த தொகுப்பில் உள்ளவை அனைத்தும் உங்களை திருப்தி படுத்தும் என்று நினைக்கிறேன்.
பலி என்கிற கதையின் முடிவு ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையாக கொண்டது. கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அதுதான் நடந்தது. அதுதான் சரி என்றும் நான் நினைக்கிறேன்.
பொதுக் கூடடம் எனக்கிற கதையை நான் எழுதியது 2010ல். ஆனாலும் இன்னமும் அதன் தன்மை குறையாமல் இருக்கிறது. அரசியல்வாதிகள் வாழ்க.
விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் அர்த்தங்களை எளிய முறையில் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல் பலரிடம் இருக்கிறது.
அவர்களுக்காவே இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.
நீண்ட
விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் அர்த்தங்களை எளிய முறையில் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல் பலரிடம் இருக்கிறது.
அவர்களுக்காவே இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.
நீண்ட விளக்க உரைகளை கொடுத்து அதிக சிரமங்களை கொடுக்காமல் இரத்தின சுருக்கமாக அர்த்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
எந்தவித வணிக நோக்கமும் இல்லாமல், இந்த புத்தக விற்பனை மூலமாக கிடைக்கும் அனைத்து வருவாயும் கிராம கோயில்களில் கைங்கர்யம் செய்து வரும் ஏழை அர்ச்சகர்கள்/பட்டாசார்யர்களுக்கு அளிக்கப்படும்.
(என்னை நகைச்சுவை கதைகள் எழுதத் தூண்டிய திருவாளர் ஜ ரா சுந்தரேசன் அவர்களுக்கு இந்த கதை சமர்ப்பணம். கான்சப்ட் அவ Read More...
“எல்லோரும் கவனமாக கேட்டுக்குங்க. யாராவது சொதப்பினீங்கன்னா…, தக்காளி…. எண்ட் கார்டுதான்” அருண் கண்கள் ச Read More...
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.