Share this book with your friends

Kanchi Mahaswamy Thiruvilayadarpuranam / காஞ்சி மகாசுவாமி திருவிளையாடற் புராணம் NA

Author Name: Sai Adimai | Format: Paperback | Genre : Poetry | Other Details

காஞ்சி மகாசுவாமி ஆற்றிய அற்புதங்கள் சிலவற்றைக் கவிதை வடிவில் கண்டு மகிழுமாறு எளிய இனிய நடையில் எழுதப்பட்டிருக்கிறது. மனித மனத்திற்கு எட்டாத விஞ்ஞான உலகு அறிந்து கொள்ள முடியாத பல அற்புதங்களை அம்மகான் தூல உடலில் வாழ்ந்திருந்தபோது ஆற்றியிருக்கிறார். தூல உடலை விட்டு மறைந்தபிறகும் அற்புதங்கள் பல இந்நாளும் ஆற்றி வருகிறார். அவரருளால் அவர் ஆற்றிய அற்புதங்களை மேலும் அடுத்தடுத்துப் பிரசுரிக்க எண்ணமுள்ளது.

Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சாயி அடிமை

தமிழ்நாட்டின் நாகரீகம் காணாத ஒரு சிறு கிராமத்தில் இந்நூலாசிரியர் வளர்ந்து வந்திருக்கிறார். மூதறிவியல் படித்து இரண்டாண்டு வரை சோற்றுக்கும் துணிக்கும் வழிசெய்யும்  சிறு வேலை கூடக் கிடைக்காது பெற்றோருக்குச் சுமையாக இருந்த காலத்தில் 1976ம் ஆண்டு மார்ச் மாதம் இம்மகானைச் சந்தித்துத் தன்  மனக்குறையைக் கலவை கிராமத்தில் வெளியிட்டபோது அம்மகான் அருளாசி வழங்கினார். அது பெற்ற மூன்று திங்களுக்குள் வேலை கிடைக்கவும் மகானின் மீது பெருமதிப்பும் பெருமையும் அதிகரிக்க ஆரம்பித்தது. ஒன்றுக்கும் உதவாத தண்டச் சோறு ஆகிய ஆசிரியரை வாழ்க்கையில் வெற்றிகாண வைத்து Navaratna PSUல் மிக உயர்ந்த பதவியில் அமர்த்தி வைத்த பெருமை அந்த மகான் ஒருவரால் தான் இயலும். இதை விடவும் அவரது அரிய அற்புதச் செயலுக்கு வேறு எடுத்துக் காட்டு வேண்டுமோ ?

 

இப்புத்தகத்தைப் படிக்கும் அடியார் அனைவரையும் அந்த மகான் ஆசி வழங்கிப் பதினாறு வகைச் செல்வமும் அருள ஆசிரியர் வேண்டுகிறார். புத்தகத்தின் விற்பனையால் கிடைக்கும் எல்லாத் தொகையும்  காஞ்சி சங்கரமடத்திற்குக் காணிக்கையாக அர்ப்பணிக்கப்படுகிறது.

இதேபோல் "சிரடி சாயி திருவிளையாடற் புராணம்" ( கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரசுரம்) என்ற தலைப்பில் நூலாசிரியர் சிரடி மகானின் அற்புதங்கள் சிலவற்றைக் கவிதை வடிவில் எழுதியிருக்கிறார். அதையும் படித்து அடியார் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  தமிழ்கூறும் நல்லுலகு இப்புத்தகத்தையும், ஆசிரியரையும் ஆதரிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

 

Read More...

Achievements

+9 more
View All